முதல்வர் பழனிசாமி: கோடநாடு விவகாரம்; திமுக போடும் நாடகம்

முதல்வர் பழனிசாமி: கோடநாடு விவகாரம்; திமுக போடும் நாடகம்

2 mins read

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பில் என்மீது அவதூறாகப் பழிசுமத்தப் பட்டுள்ளது. இதெல்லாம் திமுக திட்டமிட்டு நடத்தும் நாடகம். இந்த நாடகத்தை சட்டபூர்வமாக உடைத்து தவிடு பொடியாக்கு வேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது, "முதல்வர் மீதே பொய் வழக்குப் புனையப்படுகிறது என்றால் திமுக ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு கோடநாடு சசிகலா குடும்பத் தினரின் கட்டுப்பாட்டில் இருந்த தாகவும் அங்கு தங்களுக்கு எதி ரான ஆதாரங்கள் இருந்திருந் தால் அவர்கள் சும்மா விடுவார்களா என்று வினவிய பழனிசாமி, பொய் சொன்னாலும் அதைப் பொருந்தச் சொல்லவேண்டும் என்றும் கட்டுக்கதை திரித்து விடுகின்றனர் என்றும் கூறினார். "கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் திமுக வினர் திட்டமிட்டு சதி வலை பின்னுகின்றனர், என் மீது வழக் குப் போடுகின்றனர்.

"வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன். பொய்யான தகவல் களை என்மீது சுமத்துகின்றனர்; அதை சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வேன் "எதற்கும் பயப்பட மாட்டேன். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். எனக்கு எதிராக எதை எதையோ செய்து பார்த்தனர். இப்போது மிரட்டிப் பார்க்கின்றனர். " கொ ள் ளை ய ர் க ளு க் கு ம் திமுகவினருக்கும் என்ன சம்பந் தம்? குற்றம் புரிந்தவர்களோடு திமுகவிற்கு தொடர்பு உள்ளது. திமுக ஆடும் நாடகமிது. உண்மை, நீதி எப்போதும் வெல்லும்; துரோ கம் வெல்லாது," என பழனிசாமி ஆவேசமாகப் பேசியுள்ளார்.