செல்வாக்கில்லாத பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்: அதிமுக

செல்வாக்கில்லாத பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்: அதிமுக

1 mins read

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற வேண்டுமானால் தமிழகத்தில் செல்வாக்கில்லாத பாஜகவுடன் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிடுவதே சிறந்தது என்று அதிமுக அமைச்சர்கள் கூறியுள்ளனர். மறைந்த முன்னாள் அதிமுக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெய லலிதாவின் இரட்டை இலைச் சின்னத்தைக் காண்பித்தே இது வரை அமோக வெற்றிபெற்று வந் துள்ள அதிமுக கட்சியை இனி நடக்கவுள்ள தேர்தலிலும் தோல்வி என்ற பேச்சுக்கே இடமின்றி வெற்றிபெறச் செய்யவேண்டும்.

இதற்கு தமிழகத்தில் செல் வாக்கற்ற பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அவரது அமைச்சர்கள் வலியுறுத்திக் கூறி யுள்ளனர். "பாஜகவுக்கு தமிழகத்தில் செல்வாக்கில்லை. எனவே தனித்து நின்றால் கணிசமாக வெற்றிபெற வாய்ப்புள்ளது. தேர் தலுக்குப் பின்னர் வேண்டுமானால் பாஜகவை ஆதரிக்கலாம்," என பாஜகவுடன் கூட்டு சேர விரும்பாத அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அர சியல் கட்சியும் எந்தெந்த கட்சி யுடன் கூட்டணி அமைக்கலாம் என்பதை அறிவிக்கவேண்டிய கட் டாயத்தில் உள்ளன. ஏற்கெனவே திமுக, காங்கிர சுடன் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டது. இப்போது அதிமுக-பாஜக கூட்டணி அமைக்குமா? அல்லது அதிமுக தனித்துக் களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.