மாமல்லபுரம்: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகை யில், பிளாஸ்டிக் ஸ்டிராவுக்கு (உறிஞ்சி) மாற்றாக பப்பாளி இலைத் தண்டை இளநீர் பருகுவோருக்குத் தருகிறார் மாமல்லபுரத்தைச் சேர்ந்த சாலமன் என்ற இளநீர் வியாபாரி. இதுகுறித்து சாலமன் கூறியபோது, "வட மாமல்லபுரம் பகுதியில் நான் வசித்து வருகிறேன். பிளாஸ்டிக் ஸ்டிரா தான் இளநீரை உறிஞ்சிக் குடிக்க வசதியாக இருக்கும். எனினும் பிளாஸ்டிக் பயன்பாடு கூடாது என்று அரசு தடை விதித்துள்ளதால் நான் மாற்றுவழியைத் தேடினேன். ஒரு பப்பாளி மரத்தின் இலைத் தண்டை ஒடித்துப் பார்த்தேன். அது ஸ்டிரா போலவே இருந்தது. அதை ஸ்டிரா அளவுக்குத் துண்டாக்கி இளநீர் விற்பனைக்குக் கொண்டு சென்றேன். அதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி அதில் இளநீர் பருகினர்," என்றார்.
இளநீர் உறிஞ்சுவதற்கு பப்பாளி உறிஞ்சியைத் தரும் இளநீர் வியாபாரி
1 mins read

