தமிழகத்தில் பரவும் எச்1என்1 காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் பரவும் எச்1என்1 காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை

1 mins read

சென்னை: தமிழகத்தில் மீண்டும் எச்1என்1 காய்ச் சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இக்காய்ச்சல் மீண்டும் பரவுவதைத் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக் கைகளில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர் களைச் சந்தித்த பொது சுகாதார இயக்குநர் குழந்தைசாமி, "தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத னால் எச்1என்1 காய்ச்சல் மாநிலத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது. சிகிச்சைக்காக தினமும் ஒருவர் அல்லது இருவர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனினும் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாருமில்லை," என்று கூறினார். தமிழகத்தில் எச்1என்1 மீண்டும் பரவத் தொடங்கி உள்ளதாகவும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 48 பேர் அதனால் பாதிக்கப்பட்டி ருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடக்கத்தின் போது இக்காய்ச்சல் பரவியது. அப்போது பலர் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். இதையடுத்து இந்தாண்டும் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. நாட்டிலேயே இந்தாண்டு தொடக்கத்தில் ராஜஸ் தானில் பன்றிக்காய்ச்சலுக்கு 780 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இதில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.