தமிழகத்தில் இன்னும் சில மாதங் களில் நடக்கவிருக்கும் நாடாளு மன்றத்தேர்தலில் புதுவையையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் திமுக தலைமையில் மிகவும் வலுவான கூட் டணியை அமைக்க காங்கிரஸ் கட்சி களத்தில் குதித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் அமமுக கட்சியைச் சேர்த்து விடவேண்டுமென காங்கிரஸ் கட் சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக துணை பொதுச் செய லாளர் தினகரன் இருவருக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த சசிகலாவுக்கு ராகுல் தூதுவிட்டு இருக்கிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் திமுக, தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் பலவீனமாக இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்து உள்ளது. இந்த பலவீனத்தைச் சரிக்கட்ட வேண்டுமானால் திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் மட்டும் சேர்ந்தால் போதாது என்று பல ஆய்வுகள் கணித்துள்ளன. அமமுக கட்சியை திமுக கூட்டணியில் சேர்த்துக்கொண் டால் அந்தக் கூட்டணி பிரம் மாண்ட வெற்றியைப் பெற நூற் றுக்குநூறு உத்திரவாதம் கிடைத்து விடும் என்று ராகுல் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

