சேலம்: தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதை அடுத்து சேலம் மத்திய சிறை வார்டன் மாதேஸ் (28 வயது) குண்டர் சட்டத் தில் கைதாகி உள்ளார். இவர் முன்விரோதம் காரணமாக செல் வம் என்பவரது காரை கடந்த ஜூலை மாதம் தீ வைத்து எரித் துள்ளார். இதையடுத்து மாதேஸ் மீது வழக்குப் பதிவானதுடன் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார். இந்நிலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி மேலும் ஒரு காரை எரித்ததாகவும் மாதேஸ் மீது வழக்குப் பதிவானது. மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி ஒருவரி டம் இருந்து தங்கச் சங்கிலி, கடிகாரம் ஆகியவற்றைப் பறித்த தாகவும் அவர் மீது புது வழங்குகள் பதிவாகின. இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தற்போது குண்டர் சட்டத்தின்கீழ் மீண்டும் கைதாகியுள்ளார்.
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 'வார்டன்' குண்டர் சட்டத்தில் கைது
1 mins read

