பாஜகவுடன் கூட்டணி ஏதுமில்லை: தம்பிதுரை திட்டவட்டம்

பாஜகவுடன் கூட்டணி ஏதுமில்லை: தம்பிதுரை திட்டவட்டம்

1 mins read

திருவிடைமருதூர்: பாஜக, அதிமுக இடையே கூட்டணி ஏதும் இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருவிடைமருதூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும் என்றார். "தமிழகத்திற்கு வரவேண்டிய 16 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழகத்திற்கான பல்வேறு சலுகைகள் வழங்க மத்திய அரசு மறுப்பதால் அதுகுறித்து உரிமையுடன் கேட்டு வருகிறேன். தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை, என்றார் தம்பிதுரை.