சென்னை: முதல்வர் பழனிசாமி மீது ஏற்கெனவே கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிலையில், முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். "சாதாரண சர்க்கரை மூட்டை பழனிசாமியாக இருக்கும் போதே அவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. கோடநாடு எஸ்டேட் சம்பந்தமாக 5 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. "இதில் பழனிசாமியின் தூண்டுதல் இருப்பதாக கூறப்படுவதால் அவர் பதவியில் இருந்து விலகி, வழக்கைச் சந்தித்து, முடிந்தால் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் மத்திய அரசும் ஆளுநரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
'முதல்வர் பதவி விலக வேண்டும்'
1 mins read

