ஆக அதிகமான காளைகள்: உலக சாதனையை முறியடித்தது விராலிமலை ஜல்லிக்கட்டு

ஆக அதிகமான காளைகள்: உலக சாதனையை முறியடித்தது விராலிமலை ஜல்லிக்கட்டு

2 mins read
82e3d070-5b1f-4c04-b7b8-410793d22b4f
காளையை அடக்க முற்படும் காளையர்கள். படம்: தமிழக ஊடகம் -

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்- கட்டுப் போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. விராலிமலையில் நேற்று முன்- தினம் ஒன்பது மணி நேரம் நடை பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிகமான காளைகள் கலந்து- கொண்ட சாதனை நிகழ்த்தப் பட்டது. மொத்தம் 1,353 காளைகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்- டன. அவற்றை அடக்க 800க்கு மேற்பட்ட வீரர்கள் வந்திருந்தனர். காலை 8.20 மணியளவில் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே அதிகமான காளைகள் கலந்து- கொண்ட போட்டி இதுதான். இந்தப் போட்டியை உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழுவிலிருந்து மெலடியோ, மார்க் என்னும் இருவர் வந்திருந்தனர்.

போட்டி தொடங்கியது முதல் மாலை 6 மணியளவில் கடைசி காளை வெளியேறும் வரையில் அக்குழுவினர் போட்- டியை மதிப்பீடு செய்தனர். இறுதியில் விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டி உலக சாதனை படைத்தற்கான சான்றி- தழை அவர்கள் அதிகாரபூர்வமாக வழங்கினர். மதுரையில் நடைபெற்ற போட்டியில் 647 காளைகள் இடம்- பெற்றதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. விராலிமலை போட்டியில் 2,000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப் பட்டது. புதுக்கோட்டை, மதுரை, சிவ- கங்கை, தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,500 காளைகள் வந்து இருந்தன. நேரமின்மை காரணமாக 150க்கு மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்- படவில்லை. இருப்பினும் அந்தக் காளைகளின் உரிமையாளர்- களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங் கப்பட்டன.