திமுக வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

திமுக வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

1 mins read

சென்னை: பொருளாதார ரீதியி லான 10 விழுக்காடு இடஒதுக்கீட் டுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில ளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங் கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப் பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நேற்று விசா ரணைக்கு வந்தபோது மத்திய அரசின் வழக்கறிஞர் ராஜகோபா லன், "மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி நாடாளுமன்ற உறுப்பினர். இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தவர். "அங்கு வெற்றிபெற முடியா ததால் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். இந்தச் சட்டத்திருத்தத் தால் தனிப்பட்ட முறையில் அவர் எந்த வகையிலும் பாதிக்கப்பட வில்லை. "பொதுநல வழக்காக இந்த மனுவைத் தாக்கல் செய்ய ஆர்.எஸ். பாரதிக்கு முகாந்திரம் கிடையாது. அரசியல் லாபத்திற்காகவே அவர் இதனைத் தொடர்ந்துள்ளார். "இந்தச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்தப்போவது மாநில அரசுதான்," எனத் தெரிவித்தார். இதையடுத்து, இது தொடர் பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத் தரவிட்டது.