சென்னை விமான நிலையத்தில் அனுமதி ரத்து; ஒரு லட்சம் போலிசார் குவிப்பு

சென்னை விமான நிலையத்தில் அனுமதி ரத்து; ஒரு லட்சம் போலிசார் குவிப்பு

1 mins read

சென்னை: தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவி தங்களைத் தவிர்ப்பதற்காக பாது காப்புப் பணியில் சுமார் ஒரு லட்சம் போலிசார் ஈடுபடவுள்ளனர். குடியரசு தின விழா வரும் சனிக்கிழமை 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண் டாடப்படவுள்ளது. தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், போலிசாரின் அணி வகுப்பு உள்ளிட்டவை நடை பெற உள்ளன. இதைத் தவிர்த்து பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பாக குடியரசு தினம் கொண் டாடப்படவுள்ளது. அந்த சமயத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது. இப் பணியில் சுமார் ஒரு லட்சம் போலி சார் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில் உள்ள ரயில் நிலைங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நிலைமை கண்காணிக்கப்படுகி றது. சென்னையைப் பொறுத்தவரை போலிசார் இரவு ரோந்துகளிலும் வாகனத் தணிக்கையிலும் அதிகம் ஈடுபடுவர். சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக வரும் 31ஆம் தேதி நள்ளிரவு வரை பார் வையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அங் கும் வாகன சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.