கொலைநகரமான சென்னை: ஒரே நாளில் ஐந்து கொலைகள்

கொலைநகரமான சென்னை: ஒரே நாளில் ஐந்து கொலைகள்

1 mins read

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் 24 மணி நேரத்தில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில் ஒரே ஒரு கொலைச் சம்பவம் தொடர்பில் அறுவரை போலிஸ் கைது செய்துள்ளது. மற்ற குற்றச் செயல்களில் சம்பந் தப்பட்டவர்களை போலிஸ் தேடி வருகிறது. பட்டப்பகலில் சாலையின் நடுவே ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரும்பாக்கத்தில் அரங்கேறியது. குமரேசன், 30, என்ற அந்த ரவுடி மீது சேத்துப்பட்டு, சூளைமேடு காவல் நிலையங்களில் சில கொலை வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு பள்ளிக்கரணையில் யுவராஜ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் குமரேசன் கைதானார்.

இந்த வழக்குத் தொடர்பில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னி லையாகிவிட்டுத் திரும்பியபோது அவர் கொல்லப்பட்டார். இதைக் கண்ட பொதுமக்கள் முதலில் திரைப்படப் படப்பிடிப்பு என நினைத்ததாகவும் பின்னர் உண்மை என அறிந்ததும் அலறி ஓடியதாகவும் கூறப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலிசார், இந்த வெறிச்செயலை அரங்கேற்றியது சகாயம், 'பாம்பு' வினோத் கும்பல் என அடையாளம் கண்டது. இதேபோல, சூதாட்டத்தின் போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராற்றில் புளியந்தோப்பைச் சேர்ந்த 22 வயதான குமரன் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப் பட்டார். ஆனாலும் இதற்கு முன் விரோதமே காரணம் எனக் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் ஹைதர் என்ற அப்பு என்பவரையும் அவரது கூட்டாளிகள் ஐவரையும் போலிஸ் கைது செய்தது.