சுறாமீன் உடற்பாகங்களை சிங்கப்பூருக்குக் கடத்த முயற்சி

ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் விமானத்தில் பெருமளவில் வெளி நாட்டுப் பணம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதி காரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத் தது. 
இதையடுத்து சுங்க இலாகா அதி காரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். 
அப்போது சிங்கப்பூருக்கு சுற்றுலா விசாவில் செல்வதற்காக வந்த முகமது சலீம், 54, என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அதிகாரிகள் விசாரித் தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளைச் சோதனை செய்தனர்.
அதில் இருந்த இரு பொட்டலங்களை பிரித்துப் பார்த்தனர். ஒன்றில் 6,000 அமெரிக்க டாலர், 27,600 யூரோ, 1,000 நார்வே குரோன், 3,400 கனடா டாலர், 2,450 பவுண்ட், 14,000 கத்தார் ரியால்கள் இருந்தன.
மற்றொரு பார்சலில் சுறா மீன்களின் பற்கள், வால்கள் உள்ளிட்ட உடற்பாகங் கள் இருந்தன. சுறா மீனின் உடல் பாகங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை யடுத்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் உடல் பாகங்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக முகமது சலீமை கைது செய்த அதிகாரிகள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.