கிணற்றுக்குள் தத்தளித்த யானைக்குட்டி மீட்பு

நெல்லை: திருநெல்வேலி மாவட் டம், புளியங்குடி அருகே உள்ள பள்ளத்து ஓடை என்ற இடத்தில் எலுமிச்சை தோட்டத்தில் உள்ள கிணற்றினுள் 4 வயது யானைக் குட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிர வில் தவறி விழுந்தது. சுமார் 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் 15 அடிக்கு தண்ணீர் இருந்தது. 
கிணற்றுக்குள் நீண்ட நேரம் தண்ணீரில் நீந்தியபடியே யானைக் குட்டி சுற்றிச்சுற்றி வந்தது. வனத் துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்புப்பணியை மேற் கொண்ட தீயணைப்புப் படையினர் கிணற்றுக்குள் கயிறுகளை வீசினர். 
கயிற்றை இழுத்து யானைக் குட்டி மேலே ஏறி வர அவர்கள் உதவினர். 3 மணி நேரத்துக்கு மேல் போராடி யானைக்குட்டியைப் பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர், தீயணைப்புத் துறையினரைப் பொதுமக்கள் பாராட்டினர்.