சர்ச்சைக்குரிய லயோலா கண்காட்சி விவகாரம் தொடர்பில் புகார்

சென்னை: இந்து கடவுள்கள், பெண்கள் மற்றும் பிரதமர் மோடியை இழிவுபடுத்தியோர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, மற்றும் இந்து அமைப்பினர், டி.ஜி.பி. மற்றும் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 19, 20ஆம் தேதிகளில் லயோலா கல்லூரியில் நடைபெற்ற ‘வீதி விருது விழா’வின்போது இந்து கடவுள்கள், பாரத மாதா, தேசியக் கொடி மற்றும் தேசிய சின்னமான அசோக சக்கரத்தை மிகவும் கேவலமாக இழிவுபடுத்தி, ஓவியங்கள் வரைந்திருந்தனர். இந்திய இறையாண்மைக்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வக்கிர எண்ணத்துடன் பெண்களை அசிங்கமாக வரைந்தும் காட்சிப்படுத்தி இருந்தனர். மக்கள் குடும்பத்துடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்து மதத்தை கொச்சைப்படுத்தியதுடன் தேச விரோத கருத்துகளும் பரப்பப்பட்டன. எனவே, இந்துக்களின் உணர்வை புண்படுத்தி, பெண்களின் மாண்பை சீர்குலைத்து, மத கலவரத்தைத் தூண்டும் விதமாக நிகழ்ச்சி நடத்தியோர் மற்றும் அனுமதி அளித்த கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவன். படம்: இணையம்

20 Jun 2019

மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய் வதற்கு ஆய்த்தமாகிவிட்ட பெண் கள். படம்: தமிழக ஊடகம் 

20 Jun 2019

பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள்