தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்கள்

தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்கள்

1 mins read

சென்னை: தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்ட 'பேருந்து தினம்' கொண்டாடிய அம்பேத்கர் கலைக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேருந்தை அலங்கரித்து அதன் மேல் ஏறி ஆட்டம் போடுவதும், சாலையில் ஊர்வலமாக பேருந்தை செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தது. பேருந்து நாள் கொண் டாட்டம் என்ற பேரில் மாணவர்கள் குழுக்­களாக மோதிக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற் படுத்து­வதைத் தடுக்கும் வகையில் பேருந்து நாள் கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.