சீமான்: கருத்துரிமை ஓவியங்கள் அரசியலாக்கப்படுகின்றன

சென்னை: “லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து நடத்திய ஆறாம் ஆண்டு ‘வீதி விருது விழாவில்’ கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களுக்கு அக்கல்லூரி நிர்வாகம் மன்னிப்புக் கோரிவிட்ட பிறகும் இதனை வேண்டுமென்றே அரசியலாக்கி அதன்மூலம் ஆதாயம் தேட முயலும் இந்துத்துவ இயக்­கங்களின் கீழ்த்தரமான செயல்கள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது,” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான் கண்டித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையையும், கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்கு­தல்களையும், பெண்களின் பாதுகாப்பற்ற நிலையினையும், கருத்­தாளர்களுக்கும் படைப்பாளர் களுக்கும் விடுக்கப்படுகிற அச் சுறுத்தல்களையும் ஓவியங்களின் மூலமாகத் தெரிவிக்கும் விதமாக ‘கருத்துரிமை ஓவியங்கள்’ எனும் பெயரில் நாட்டின் சிக்­கல்களை மையப்படுத்தி முகிலன் என்பவர் வரைந்த ஓவியங்கள் லயோலா கல்லூரியில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
அவை நாட்டில் நிலவும் நிலை யினை அப்பட்டமாக வெளிக் காட்டுவதாலும், இந்துத்துவாவின் கோர முகத்தினையும் போலித் தேசப்பற்றினையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதாலும் கோபம் கொண்ட இந்துத்துவ அடிப்படைவாதிகள் அதற்கெதிராக விடுத்து வரும் மிரட்டல்களில் இருந்தும் அச்சுறுத்தல்களில் இருந்தும் லயோலா கல்லூரியைக் காக்க வேண்டியது ஜனநாயகவாதி களின் தலையாய கடமையாகும்.
“லயோலா கல்லூரியை இந்த ஒரு சம்பவத்திற்காக அரசுடைமை­யாக்க­வேண்டும் என்ப­தெல்லாம் அப்­பட்டமான அடிப்­படைவாத அரசியல். அதுவும் கண்காட்சி ஓவியங்களுக்கு கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரிவிட்ட பிறகும் அக்கல்லூரிக்கு எதிராக இந்துத்துவ இயக்கங்கள் ஆற்றி வரும் எதிர்வினைகள் யாவும் தேவையற்றது; முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண் டது,” என்றார் சீமான்.

Loading...
Load next