மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் விழா

சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. 
இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாஜக தேசிய செயலாளர் பி.முரளிதர ராவ், மத்திய அமைச் சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் மும்முரமாக கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதர ராவ், “திமுக, அதிமுகவுடன் ஏற்கெனவே நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகும் முன்பு எதையும் வெளிப்படையாக நாங் கள் தெரிவிக்க மாட்டோம். பிரத மரே உரிய நேரத்தில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார். பிர தமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள்,” என்றார்.  
“மத்தியில் நாலரை ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங் களை பிரதமர் மோடி அளித்துள் ளார்.