ஆளுநர் மாளிகை முன்பு  திமுகவினர் போராட்டம்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளில் முதல்வர் பதவி விலகக் கோரியும் முதல்வர் மீது ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி நேற்று ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்ற திமுகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி திமுகவினர் முன்னேறிச் செல்ல முயன்றதால் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “ஆளுநரிடம் மனு கொடுத்தும் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரியவில்லை. உலக முதலீட்டாளர்கள் என்ற பெயரில் முதல்வர் போலி மாநாட்டை நடத்துகிறார்,” என்றார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை