சென்னை: டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதால் டிடிவி தினகரன் உட்பட அக்கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த முறை சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன் னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அனைத்துக் கட்சிகளும் வியக்கும் அளவுக்கு வெற்றி பெற்றார். இதனால் அதே சின்னத்தை தனது கட்சிக்கு நிரந்தரமாக பெறு வதற்கான முயற்சியில் அவர் ஈடு பட்டார். இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தால் தனது கட்சிக்குக் குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் ஆணையத்தின் பொதுவான சின்னத்தை அங்கீ கரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே ஒதுக்க முடியும் என்று தெரி விக்கப்பட்டது. "அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின் னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடி யாது. பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தை குறிப்பிட்ட கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல," என்று தனது மனுவில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கிடையே திருச்சியில் பேசிய டிடிவி தினகரன், "தீயசக்தி யான திமுகவை விட்டு எம்ஜிஆர் வெளியே வந்ததுபோல் துரோக சக்தியான அதிமுகவிடம் இருந்து விலகி வந்துவிட்டோம். அவர் களுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை," என்றார். அதே வேளையில் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தின் பெயர், சின்னத்தை மீட்பதே எங்கள் இலக்கு என்று அவர் சூளுரைத்துள்ளார்.
குக்கர் சின்னத்தை ஒதுக்க ஆணையம் மறுப்பு; டிடிவி தினகரன் ஏமாற்றம்
2 mins read

