நடிகர் விஷால்  மீது புகார்

சென்னை: இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு நடந்ததாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் விஷால் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறைகேடு புகார் அளித்துள்ளனர்.
வரும் பிப்ரவரி 2,3 தேதிகளில்  இசை அமைப்பாளர் இளைய ராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கௌரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சிக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். 
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் ஆகிய இருவரும் நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விஷால் மீது முறைகேடு புகார் அளித்துள்ளனர்.