கமல்ஹாசன்: ஊழல் ஒழிக்கப்படவேண்டும் 

சென்னை: தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட  திரைப்பட நடிகரான கமல்ஹாசன், தமிழ்நாடு மீண்டும் முழு உருவம் பெறச்செய்வது முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் கை களில்தான் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகம் முன்னேற இளை ஞர்கள் சீர்திருத்தம் செய்ய முன் வரவேண்டும். நாற்காலி கிடைத் ததும் மக்களைப் புறம் தள்ளாமல் மக்களுக்காக, மக்கள் நலனுக் காக அரசு செயல்படவேண்டும் என்றார் கமல்ஹாசன்.
காவிரி தமிழகத்தில் பாய வேண்டும் என்பது இயற்கையின் நீதி என்பதால் காவிரிக்காக போராடுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
வாக்குக்கு லஞ்சம் வாங்கக் கூடாது என இளைஞர்கள் உறுதி ஏற்கவேண்டும் என்று வலியுறுத் திய கமல்ஹாசன், மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யம் வழங்கும் என்றும் உறுதி தெரிவித்தார். 
 திருட்டைக் குறைத்தால் மக் களுக்கான தேவைகள் நிறை வேறும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மாற்றம் நிச்சயம் என்றும் கூறிய கமல், மக்களவைத் தேர்தலில்  நிலைமையை பொறுத்து முடிவு எடுக்கப்போவதாகக் கூறினார்.
 தாமதமாக அரசியல் பிரவேசம் எடுத்ததால் வருத்தம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை