திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு பதவி

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாக திமுக அறிவித்தது. 
இதன் தொடர்பில் திமுக பெதுச் செயலாளர் க. அன்பழ கன் ஓர் அறிக்கை  வெளியிட்டார். 
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், அப்பெறுப்பில் இருந்து விடுவிக் கப்பட்டு அவருக்குப் பதிலாக கரூர் வி. செந்தில் பாலாஜி கரூர் மாவட்டக் கழகப் பெறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என்று அந்த அறிவிப்பு தெரிவித்தது. 
ஏற்கெனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட கரூர் மாவட்டக் கழக நிர் வாகிகள்  புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள  செந்தில்  பாலாஜியுடன்  இணைந்து பணி யாற்றிட வேண்டும் என்று  கட்சி கேட்டுக் கெண்டுள்ளது. 
கரூர் மாவட்டக் கழகச் செய லாளர் பதவியில் இருந்து விடுவிக் கப்பட்ட நன்னியூர் ராஜேந்திரன், திமுக நெசவாளர் அணித் தலை வராக நியமிக்கப்பட்டு உள்ளதாக வும் திமுக தெரிவித்துள்ளது.