20 பேரைக் கடித்த குரங்கைப் பிடிக்க இடைவிடா முயற்சி

20 பேரைக் கடித்த குரங்கைப் பிடிக்க இடைவிடா முயற்சி

1 mins read

சீர்காழி: மயிலாடுதுறை, சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தில் புகுந்த ஒற்றைக் குரங்கு கண்ணில் தென்படுவோரை எல்லாம் கடித்துக் குதறி வருகிறது. ஒரு வாரத்தில் 20க்கும் மேற்பட்டோரை குரங்கு கடித்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். வியாழக்கிழமை மட்டும் நான்கு பேரை குரங்கு கடித்துள்ளது. குரங்கு கடிக்கு ஆளானவர்கள், சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்கு அட்ட காசத்­தால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். வனத்துறையினர் மூன்று தினங்களாக குரங்கைப் பிடிக்க கூண்டு வைத்தும் அது சிக்கவில்லை.