நீயா நானா போராட்டத்தில்  தமிழக அரசும் ஊழியர்களும்

சென்னை:  தமிழ்நாட்டில்  ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் அரசுக்கும் ஊழியர் களுக்கும் இடையில் நடக்கும் நீயா நானா போராட்டம் போல் நேற்று விஸ்வரூபம் எடுத்தது.  
முதல்வரே தங்களை அழைத்துப் பேசவேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் சொல்லி நேற்று ஊழியர் கள் 4வது நாளாக மாநிலம் முழு வதும் ஆர்ப்பாட்டங்கள், போராட் டங்களில் ஈடுபட்டனர்.
அதேவேளையில், போராட்டத் தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் களுக்கு 17 பி பிரிவின் கீழ்  எச்ச ரிக்கை கடிதத்தை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டது.  பணிக்கு வராத ஆசிரியர் களுக்குப் பதிலாக ரூ.7,500 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர் களை நியமிக்கவும் அரசாணை வெளியிட்டு உள்ளது. 
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த செவ் வாய்க்கிழமை முதல்  தமிழகம் முழுவதும் நடக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவன். படம்: இணையம்

20 Jun 2019

மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய் வதற்கு ஆய்த்தமாகிவிட்ட பெண் கள். படம்: தமிழக ஊடகம் 

20 Jun 2019

பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள்