முதலீட்டாளர்  மாநாடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அண்மை யில் நடந்த இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிர் பார்க்கப்பட்டதைவிட பிரம்மாண்ட மான வெற்றிகரமாகவும் மாநிலத்­திற்குக் கிடைத்த வரப்பிரசாத ­மாகவும் ஆகியிருக்கிறது என்று அதிமுக அமைச்சரவை பெருமிதம் அடைந் துள்ள நிலையில், 2015ல் நடந்த முதலாவது முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அந்த மாநில நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
முதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசார ணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி கள் கேள்விகளை எழுப்பினர். 
2015ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை தொழில் கள் தொடங்கப்பட்டன? தொடங் கப்பட்ட தொழில்கள் மூலம் எத்தனை பேர் வேலை வாய்ப்பு களைப் பெற்றனர்?
முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட் டன? அந்தப் புரிந்துணர்வு ஒப்பந் தங்களின் இப்போதைய நிலை என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை மன்றம் எழுப்பியது.
மேலும், 2015ம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தமிழ் நாட்டுக்கு ரூ. 300,431 கோடி முதலீடுகளைப் பெறும் வகையில், சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் 304 புரிந்துணர்வுக் குறிப்புகள் அந்த மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட தாக முதல்வர் தெரிவித்து இருப் பதை பிரதான எதிர்க்கட்சியான திமுக கிண்டல் செய்தது. 
அந்த மாநாடு ஒரு ‘மாயமான்’ காட்சியைப் போன்றது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். 
இந்த அளவுக்குப் பொய்த் தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என்று முதல்வர் பகல் கனவு காண்பதாக வும் ஸ்டாலின் கூறினார். பலரை யும் மிரட்டி ஒப்பந்தங்களில் கை யெழுத்து வாங்கப்பட்டு உள்ளதாக வும் அவர் குறிப்பிட்டார். 
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளியல் அமைப்பின் இந்த ஆண்டு கூட்டம் நடக்கும் நேரத்தில் சென்னைக்கு முக்கியமான அனைத்துலக முத லீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்று தெரிந்தும் தேர்தலை மன தில் வைத்து இந்த மாநாட்டை அதிமுக அரசு நடத்தி ஏராளமான பணத்தை விரயமாக்கி இருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Loading...
Load next