கிராம சபை: திருநாவுக்கரசர் புகார்

சென்னை: கிராமசபைக் கூட்டங்கள் நடக்காமல் ஆளுங்கட்சி தடுக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கையில் குற்றச்சாட்டியுள்ளார். இன்று  ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவது சட்டத்தின்படி கட்டாயம். ஆகவே, மாவட்டத் தலைவர்கள் தங்கள் கிராமப் பஞ்சாயத்துகளில் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.