கொடநாடு சம்பவம் பற்றி சிபிஐ விசாரிக்க கோரிய வழக்குத் தள்ளுபடி

சென்னை: கோடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைகளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்புள்ளதாக ஓர் ஆவணப்படத்தில் கூறப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
  அந்த மனுவை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்குப் போதுமான சான்றுகள் இல்லையென நீதிமன்றம் கூறிவிட்டது.