சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜுக்கு பத்மஸ்ரீ விருது

திருவள்ளூர்: சமூக சேவகி சின்னப்பிள்ளை, திருநங்கை நர்த்தகி நடராஜ் ஆகிய இருவ ருக்கும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. 
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்த சின்னப் பிள்ளை, படிக்காவிட்டாலும் எந்த வித பொருளாதார, அரசியல் பின்புலங்களும் இல்லாமலேயே கிராமப்புறப் பெண்களின் வளர்ச்சிக்கு உழைத்தவராவார். 
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரிய அள வில் வளர இவரும் ஒரு கார ணம். 2,589 மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியவர்.
மதுரையைச் சேர்ந்த திரு நங்கை நர்த்தகி நடராஜ் பல்வேறு சோதனைகளைக் கடந்து, பரதம் பயின்று உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற் றியவர். தமிழகத்தில் முதன்முத லாக முனைவர் பட்டம், தேசிய விருது, கலைமாமணி விருது பெற்ற திருநங்கை இவர்.