பணிக்கு வராத 5 லட்சம் ஊழியர்களுக்கு நோட்டீஸ்

சென்னை: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
பொதுப்பணி, வருவாய் உள் ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் தற்போது நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதையடுத்து 15 நாட்களுக் குள் விளக்கம் அளிக்க அறி வுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்படு வதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழி யர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் மாநிலம் முழு வதும் அரசுப் பள்ளிகள் பலவும் இயங்கவில்லை.
2019-01-27 06:00:00 +0800
ஸ்டாலின்: மொழித் திணிப்பை மட்டுமே திமுக எதிர்த்து வருகிறது
சென்னை: முன்னாள் முதல்வர் ராஜாஜி காலம் முதல் பிரதமர் மோடி வரை தமிழகத்தின் மீது இந்தி மொழியைத் திணித்து வருவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். 
இந்தி மட்டுமல்லாமல் எந்த மொழிக்கும் திமுக எதிரி அல்ல என்றும், மொழி ஆதிக்கத்தை மட்டுமே தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் அவர் சென்னை யில் நடைபெற்ற மொழிப் போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.
ராமர் கோவில், பசு பாதுகாப்பு, இந்தி திணிப்பு, சிறு பான்மையினர் மீதான வெறுப்பு ஆகியவைதான் பாஜகவின் கொள்கையாக உள் ளது என்று குறிப்பிட்ட அவர், மக்களின் வளர்ச்சி, பொருளாதாரம் குறித்துப் பிரதமருக்குக் கொஞ்சம் கூட கவலையில்லை என்றார்.
“இவ்வளவு பொய் சொல்லும் பிரதமரை உலகத்திலேயே பார்த்ததில்லை. மோடி மீண்டும் பிரதமராக வந்துவிட்டால் இந்தியா வளர்ச்சி யில் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும்,” என்று ஸ்டாலின் மேலும் குற்றம்சாட்டினார். 
இதற்கிடையே சாத்தான்குளத் தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக மகளி ரணி மாநில அமைப்பாளர் கனி மொழி, தமிழகத்தின் குரலைக் கேட்கும் ஆட்சி மத்தியில் உருவாக வேண்டும் என்றார். 
நடப்பு மத்திய அரசு தொழி லதிபர்களுக்கு மட்டுமே ஆதர வாக இருப்பதாகப் புகார் எழுப் பிய அவர், மக்களுக்கு வேலை வாய்ப்புகள் தரக்கூடிய அரசு மத்தியிலும் மாநிலத்திலும் இல்லை என்றார்.
“தோல்விப் பயம் காரணமாகவே அதிமுக அரசு உள்ளாட்சித் தேர் தலை நடத்தவில்லை.  டெல்லிக்கு நமது பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகத் தில் 21 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கப்போகிறது. அதன் மூலம் நிச்சயமாக மாற்றம் ஏற்ப டும்,” என்றார் கனிமொழி.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

நாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம் 

சிலம்பம் இந்தியாவின் புராதன தற்காப்-புக் கலை என்றும் அதன் தோற்றுவாய் தமிழ்நாடு என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

சிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு