குறுக்கு வழியில் வெற்றிபெற துடிக்கும் பாஜக: நாராயணசாமி புகார்

புதுவை: நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்தி ரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது அனைத்துக் கட்சிகளின் கருத்தாக உள்ளது என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில்நுட்பத்தில் நன்கு வளர்ச்சி பெற்ற நாடுகளில் கூடத் தேர்தலின்போது வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படுவதாகச் சுட்டிக் காட்டினார். 
“மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பாஜகவோ குறுக்கு வழியில் வெற்றி பெற நினைக்கிறது,” என்று நாராயணசாமி சாடினார்.