அன்புமணி: கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பு வெளிவரும்

தர்மபுரி: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பு வெளி யிடுவார் என அன்புமணி ராமதாஸ் எம்பி தெரிவித் துள்ளார். 
பென்னாகரத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், ஒகேனக்கல் கூட்டுக் குடி நீர்த் திட்டம் நிறைவேறிய தற்கு பாமகதான் முக்கியக் காரணம் என்றார்.
“நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துப் பல்வேறு விதமான ஆரூடங்கள், கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆனால் பாமகவைப் பொறுத்தவரை கூட்டணி குறித்து முடி வெடுக்கும் அதிகாரம் டாக்டர் ராமதாசிடம் அளிக்கப்பட்டுள்ளது. 
“எனவே அவர் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவார். பாமக நிறுவனர் அறிவிக்கும் கூட்டணியே இம்முறை வெற்றிகரமான கூட்ட ணியாக அமையும்,” என்று அன்புமணி மேலும் தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை