புற்றுநோயால் கண்களை இழந்த ஆசிரியருக்கு செயற்கைக் கண் பொருத்தப்பட்டது

சென்னை: புற்றுநோயால்  பாதிக்கப் பட்டு கண்ணை இழந்த வடமாநில ஆசிரியருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் செயற்கைக் கண் பொருத்தப்பட்டுள்ளது. 
இந்தச் செயற்கைக் கண்ணைக் கொண்டு பார்க்க முடியாது என் றும், பார்ப்பதற்கு அசல் கண் களைப் போன்றே தோற்றமளிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். 
உத்தரப் பிரதேச மாநிலம் அசம் கார் மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதான தினேஷ் யாதவ் ஆசிரி யராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு வலது கண்ணில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து அவரது கண் களைப் பரிசோதித்த மருத்துவர்கள் வலது கண்ணை அகற்றவேண்டும் என்று கூறினர். இதையடுத்து அந்தக் கண் அகற்றப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளா னார் தினேஷ் யாதவ். 
இதனால் மற்றவர்களிடம் பேசிப் பழகுவதை அவர் அறவே நிறுத்திவிட்டார். 
இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் செயற்கைக் கண் பொருத்தப்படுவதாக அவரது குடும்பத்தாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து தினேஷ் யாதவை அவரது குடும்பத்தார் சென்னைக்கு அழைத்து வந்தனர். 
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவருக்குச் செயற்கைக் கண் பொருத்துவது என முடிவா னது. ஸ்டான்லி அரசு மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர்கள் தினே‌ஷுக்கு வெற்றிகரமாக செயற்கைக் கண்ணைப் பொருத்தி உள்ளனர். 
வலது கண் அகற்றப்பட்டதால் அந்த இடம் குழியாகி இருந்தது என்றும் இதனால் அவர் கடும் மனவேதனைக்கு ஆளானதாகவும் குறிப்பிட்ட மருத்துவர்கள், ஒரு வகை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட செயற்கைக் கண் பொருத்தப்பட்ட தும் தினேஷ் மகிழ்ச்சியாக இருப்ப தாகத் தெரிவித்துள்ளனர்.
“தினே‌ஷுக்கு கண் குழியை அளவு எடுத்து முதலில் மெழுகில் செய்யப்பட்ட கண் பொருத்தப்பட் டது. பின்னர், தோலின் நிறம் இடது கண்ணின் நிறம் போன்ற வற்றை ஒப்பிட்டு செய்யப்பட்ட செயற்கைக் கண் பொருத்தப் பட்டுள்ளது. கண் இமைகளும் செயற்கையாக வடிவமைக்கப்பட் டுள்ளன,” என்று அரசு மருத்து வர்கள் மேலும் தெரிவித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை