அரசாங்க ஊழியர்கள் மீது ‘எஸ்மா’ சட்டம் பாய்கிறது

சென்னை: ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை முடக்க தமிழக அரசு ‘எஸ்மா’ சட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. 
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பு ஊதிய முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அரசு ஊழியர் களின் கோரிக்கையாகும். பல முறை இக்கோரிக்கையை முன் வைத்தும் அரசு செவி சாய்க்கா ததால் கடந்த 22ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. 
அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அரசுப் பள்ளிகள் இயங்கவில்லை. 
அரசுப் பள்ளி மாணவர்களுக் கான பொதுத்தேர்வு மற்றும் செய் முறைத் தேர்வுக்கான ஏற்பாடுகள் அடியோடு முடங்கியுள்ளதால் இந் தாண்டு உரிய நேரத்தில் தேர்வு நடக்குமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. 
இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு, ‘இன்றியமையாத செயல்கள் பரா மரிப்புச் சட்டம்’ எனப்படும் ‘எஸ்மா’, ‘டெஸ்மா’ ஆகிய வற்றைக் கையில் எடுத்துள்ளது. இதையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களைப் பணி இடைநீக்கம் செய்யும் நட வடிக்கை துவங்கியுள்ளது. 
இதுவரை 450 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட் டுள்ள நிலையில் ஆயிரக்கணக் கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தமிழக அர சின் பணியாளர் நடத்தை விதி களின்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. 
கடந்த சில தினங்களாக நீடித்து வரும் போராட்டத்தை அடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,084 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக் கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
அரசுத் தரப்பில் பேச்சு வார்த் தைக்கு அழைப்பு விடுக்காமல் போராட்டத்தை ஒடுக்கும் நடவ  டிக்கைகள் துவங்கியிருப்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. இதற்கிடையே 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் களை நியமிக்கும் பணியையும் அரசு முடுக்கி விட்டுள்ளது. 
இந்நிலையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலக ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளனர். 
வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்து போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து முடிவு செய்யப்படும் என அந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவன். படம்: இணையம்

20 Jun 2019

மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய் வதற்கு ஆய்த்தமாகிவிட்ட பெண் கள். படம்: தமிழக ஊடகம் 

20 Jun 2019

பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள்