ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருவாரூரில் போராட்டம்

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் காரணமாக திருவாரூரில் பரபரப்பு நிலவியது. இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்களும் 1000க்கும் அதிகமான விவசாயிகளும் பங்கேற்றனர். 
போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர் பாண்டியன் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடும்வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என்றார். 
திருக்காரவாசலில் நடைபெற்ற இந்த முதற்கட்ட போராட்டத்தை அடுத்து மேலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.