குடியரசு தின விழாவுக்கு குப்பை வண்டியில் வந்த மாணவர்கள்

தர்மபுரி: குடியரசு தின விழாவுக்குப் பள்ளி மாணவர்களை குப்பை அள்ளிச் செல்லும் வண்டியில் அழைத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியர் தலைமையில் குப்பை வண்டியில் அழைத்து வரப்பட்டனர். இதைக் கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர். இதுகுறித்துக் கல்வித்துறை விசாரணை நடத்தவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.