மோடிக்கும் பாஜகவுக்கும் தமிழகத்தில் துளி கூட இடம் கிடைக்காது: குஷ்பு கிண்டல்

சென்னை: பிரதமர் மோடிக்கும் பாஜகவிற்கும் தமிழகத்தில் துளி கூட இடம் கிடையாது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு (படம்) தெரிவித்துள்ளார். 
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் மோடி நேற்று மதுரைக்கு வருகை தந்த நிலையில், அதுகுறித்துத் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதி விட்டிருந்தார் குஷ்பு. 
அதில், தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட் டிருந்தார்.
மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘கோ பேக் மோடி’ (go back modi) என்ற தலைப்பின் கீழ் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவர்களில் குஷ்புவும் ஒருவர்.
“பிரதமர் மோடி தமிழகத்தில் கால் வைக்க வேண்டும் என்று நினைத்தாலே மக்கள் எல்லோரும் சேர்ந்து ‘கோ பேக் மோடி’ என்று பதிவிட ஆரம்பித்துவிடுகிறார் கள். ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு, மோடிக்கு துளிகூட இடமில்லை,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு. 
இதேபோல் தமிழக காங்கிரசைச் சேர்ந்த மேலும் பல நிர்வாகிகளும் திமுகவினரும் பிரதமர் மோடிக்கு எதிராகப் பதிவிட்டிருந்தனர். அதற்கு பாஜகவைச் சேர்ந்த எச். ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர். இதனால் சமூக வலைத்தளங்களில் இரு தினங்களாக வார்த்தைப் போர் தீவிரமாக நடைபெற்றது.