‘ஊழல் ஒழிப்பு அதிரடியால் தமிழகத்திலும் பதற்றம்’

இந்தியாவில் முன்னேறிய தொழில்துறை மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ் நாட்டை, விமான மற்றும் தற்காப்புத் தொழில்துறை மையமாக ஆக்குவது இலக்கு என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருக்கிறார்.
முன்னேறிய மாநிலமான தமிழகத்தை மேலும் முன்னேற்ற 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தில் முன்னுரிமை அளித்து தன் அரசு அந்த மாநிலத்தில் இன்னும் பல திட்டங்களை நடைமுறைக் குக் கொண்டுவரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரை அருகே தோப்பூர் என்ற இடத்தில் ரூ.1,264 கோடி செலவில் கட்டப்பட உள்ள அகில இந்திய மருத் துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ் மருத்துவமனை) திரு மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அதனையடுத்து பாஜக நடத்திய பெரும் பொதுக்கூட் டத்தில் கலந்துகொண்டு மோடி 20 நிமிடம் உரையாற்றினார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை விரைவில் தொலைநோக்கு வசதியுடன் தலைசிறந்த சிகிச்சை வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், ராமேசுவரத்தையும் பாம்பனையும் தனுஷ்கோடியுடன் இணைக்கப்போவதாக அறிவித்தார். பாம்பன் தூக்குப் பாலமும் மாற்றப்படும் என்றார் அவர்.
நீண்டகாலமாக மக்கள் விரும்பி வரும் தேஜஸ் என்ற அதிவிரைவு ரயில் சேவை மதுரை=சென்னை இடையே இயக்கப்படும் என்றும் தூத்துக்குடிக்குப் புதிய சாலை அமைக்கப்படும் என்றும் மோடி அறிவித்தார்.
தமிழ்நாட்டின் பொருளியல் வளர்ச் சிக்கு தூத்துக்குடி முக்கியம் என்பதால் அந்தத் துறைமுகம் தென்னிந்தியா விலேயே அதிக முக்கியமான துறைமுக மாக முன்னேற்றப்படும் என்றார் அவர்.
பாஜக ஆட்சியில் இந்தியாவில் மொத்தம் 9 கோடி கழிவறைகள் கட்டப் பட்டு இருப்பதாகவும் அவற்றில் 47 லட்சம் கழிவறைகள் தமிழ்நாட்டில் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு மையமாக தமிழ்நாடு திகழ பெரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மதுரை உள்ளிட்ட 10 தமிழக நகர்களில் அறிவார்ந்த நகர்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பொதுப் பிரிவில் 10% இடஒதுக்கீடு காரணமாக வேறு பிரிவினர் யாருமே பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் தமிழ் நாட்டின் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் கோரிக்கை தொடர்பில் அதற்கான ஆணையத்திடம் பேசியுள்ள தாகவும் திரு மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவில் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கு நிறைவேற படிப்படியாக முயற்சிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, ஏழை, நடுத்தர மக்களை முன்னேற்றுவதே பாஜக அரசாங்கத்தின் கோட்பாடு என்றார்.
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தமது உரையில் அஞ்சலி செலுத்திய திரு மோடி, இந்தியா முழுவதும் தன் அரசாங்கம் இதுவரை சாதித்திருக்கும் பல முன்னேற்றங்களையும் குறிப்பிட்டுப் பேசினார். அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை டெல்லி முதல் சென்னை வரை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக திரு மோடி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!