‘16 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து கேட்பதை ஏற்கமுடியாது’ உயர்நீதிமன்றம்

ஈரோடு: திருமணமாகி 16 ஆண்டுகளுக்குப்பின் விவாகரத்துக் கேட் பதை ஏற்கமுடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணா. இவர் அந்தப் பகுதியில் கணினி மையம் நடத்தி வருகிறார்.
இவருக்கும் வனிதா என்பவருக்கும் கடந்த 1997ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், தனது மனைவி இல்லற வாழ்க்கைக்கு ஒத்து வரமறுக்கிறார். எனவே விவாகரத்து வழங்குங்கள் என்று கோரி ஈரோட்டில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் குணா வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த வனிதா, "தனது கணவருக்கு வேறொரு பெண் ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விவாகரத்து கோருகிறார்.
"எனவே எனக்கும் எனது மகளுக்கும் மாதம் ரூ.30,000 ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்," எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், மகளின் பராமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.7,500 வழங்க உத்தரவிட்டு, குணாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி குணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், திருமணம் நடந்த ஒரு சில ஆண்டுகளில் இதுபோன்ற காரணங்களைக் கூறி மனுதாரர் விவாகரத்துக் கோரவில்லை. மனுதாரருக்குத் திருமணமாகி 16 ஆண்டுகளாகி விட்டது. மனுதாரரின் மனைவிக்கு வயது, உடல்நிலை, குழந்தையை வளர்ப்பதற்கான கூடுதல் பொறுப்பு உள்ளிட்ட சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. எனவே, இந்தச் சூழலில் இதுபோன்ற காரணங்களைக் கூறி விவாகரத்துக் கோருவதை ஏற்கமுடியாது. எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!