ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்கள், பெற்றோர் மறியல்

ஈரோடு: தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திவரும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி லும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் ஆசிரியர்களால் கல்வியில் கவனம் செலுத்தி வரும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பிள்ளை களின் பெற்றோர். 
இதன் காரணமாக ஆசிரியர் களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பெற்றோரும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
“மார்ச் 1ஆம் தேதி பன்னி ரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கள் தொடங்கவுள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக் கத்தக்கது,” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் நாங்கள் பணிக்குத் திரும்பப் போவதில்லை என்று ஆசிரியர்கள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும் பள்ளிக்கு வராத ஆசிரி யர்களின் அலட்சியப் போக்கை கண்டித்து மாணவர்களும் அவர் களின் பெற்றோரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோல் தஞ்சை, நெல்லை, விழுப்புரம், வேலூர், கோவை, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பணிக்கு வராத ஆசிரியர்களைக் கண்டித்து மாண வர்களும் பெற்றோரும் முழக்க மிட்டனர்.

Loading...
Load next