வங்கிச் சுவரில் துளையிட்டு ஐந்து கோடி பணம், நகைகள் கொள்ளை

திருச்சி: நாடெங்கும் வங்கியில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்து வருகின்றன. திருச்சி, சமயபுரம் டோல்கேட் பகுதி அருகே இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங் கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஐந்து லாக்கர்களை உடைத்து, அதில் இருந்த பல கோடி மதிப்பி லான பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும் வங்கியின் முக்கிய லாக்கர்கள் உடைக்கப்படாமல் பாதுகாப்பாகவே இருக்கின்றன என்று காவல்துறையினர் தெரிவித் துள்ளனர்.
கடந்த சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து வங்கிப் பணியாளர்கள் நேற்று மீண்டும் வேலைக்கு வந்துள்ளனர். அப்போது வங்கியின் வெளிப்புறம்  வழக்கம்போலவே  காட்சியளித்துள்ளது.
கதவைத் திறந்து வங்கிக்குள் சென்று பார்த்தபோது வங்கியின் பின்பக்க சுவரில் துளையிட்டுக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இதனைத்தொடர்ந்து, வங்கியில் இருந்த ஐந்து லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக் கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் வாடிக்கையாளர்களின் லாக் கர்கள்தான்.  
கொள்ளையர்கள் லாக்கர்களை உடைக்கப் பயன்படுத்திய வெல்டிங் இயந்திரம், எரிவாயு உருளை உள்ளிட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
 

Loading...
Load next