கட்டட மணல் விலை குறைந்தது

கட்டட மணல் விலை குறைந்தது

1 mins read

சென்னை: மலேசியாவில் இருந்து நான்காவது கப்பலில் சுமார் 49 ஆயிரம் மெட்ரிக் டன் ஆற்று மணல் சென்னை எண்ணூர் துறைமுகம் வந்து சேர்ந்தது. இதனை பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு இதுவரை மூன்று கப்பல்களில் மலேசிய ஆற்று மணல் வந்து வெகுவிரைவில் விற்பனையாகிவிட்டது. இப்போது 4வது கப்பலில் 49,690 மெட்ரிக் டன் மணல் வந்து சேர்ந்துள்­ளது. மலேசியாவில் புயல் காரணமாக மணல் வரத்து சற்று குறைந்திருக்கிறது. தற்போது மணல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு யூனிட் மணல் ரூ.10,350க்கு விற்கப்பட்டது. இப்போது ஒரு யூனிட் விலை ரூ.10,013 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது கப்பல் அடுத்த இரண்டு வாரத்தில் வந்துசேரும். 60 கப்பல்கள் மூலம் தலா 50,000 மெட்ரிக் டன் வீதம் மொத்தம் 30 லட்சம் மெட்ரிக் டன் ஆற்று மணல் கொண்டு வருவதற்கு மலேசியாவுடன் தமிழ் நாடு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.