15 காப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை

திருவண்ணாமலை: திருவண்ணா மலையில் குழந்தைகள் காப்பகத்தில்  தங்கியிருந்த 15 சிறுமிகளிடம் அசிங்கமான படங்களைப் பார்க்க  வற்புறுத்தி அவர்களுக்குப் பாலி யல் தொல்லை கொடுத்து வந்த காப்பக நிர்வாகி வினோத்குமாரை  போலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது போக்சோ சட்டத் தின்கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.  
திருவண்ணாமலை மாவட்டம், ரமணா நகர் அருகே பாபு என்பவ ருக்குச் சொந்தமான ‘அருணைக் குழந்தைகள் காப்பகம்’ உள்ளது.  
இங்கு பெற்றோர், உற்றார் உறவினர் ஆதரவின்றி வசிக்கும் பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் கொடுத்துவந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்காப்பகத்தில் தங்கியுள்ள பெண் குழந்தைகளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கு ஆபாச படங்களைக் காட்டி பாலியல் தொந்தரவு செய்வதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையறிந்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர் கந்தசாமி உடனடியாக களத்தில் இறங்கினார்.  காப்பகத் தில்  ஆய்வு செய்தபோது பாலியல் சம்பவம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து காப்பகத்தில் இருந்த 15 குழந்தைகளை அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. 
மற்றும் காப்பகத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் காப்பகம் சீல் வைக்கப்பட்டு, அதில் தங்கியிருந்த 19 சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவன். படம்: இணையம்

20 Jun 2019

மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய் வதற்கு ஆய்த்தமாகிவிட்ட பெண் கள். படம்: தமிழக ஊடகம் 

20 Jun 2019

பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள்