‘தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடக்கிறது’

தர்மபுரி: தமிழ்நாட்டில் மோடியின் பினாமி ஆட்சியின் கீழ் செயல் பட்டு வரும் அதிமுக கட்சி, அவசர சிகிச்சைப் பிரிவில் இருக் கும் ஒரு சுயநினைவிழந்த நோயாளியாக செயல்பட்டு வருவ தாக திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் குற்றம்சாட்டியுள்ளார்.
தர்மபுரியில் செட்ரப்பட்டி, மூக்கனூரில் நடந்த கிராம மன்ற கூட்டங்களிலும் சின்னாங்குப்பம், ஒடசல்பட்டி பகுதிகளில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
"ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலை மையில் ஓர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சி நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லமுடியாது, உட்கார்ந்து உள்ளது. உட்கார்ந்து இருப்பதாக வும் கூட சொல்லக்கூடாது. படுத்திருக்கிறது.
"அது அவசர சிகிச்சைப் பிரி வில் சுயநினைவிழந்து இருப் பதால் எவ்வித பயனுமின்றி ஓர் உப்புச்சப்பற்ற நிலையில் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அப் படிப்பட்ட இந்த ஆட்சிக்கு மத்தியில் இருக்கக்கூடிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சி முட்டுக்கொடுத்து வருகிறது.
"வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில் மோடியின் பினாமி ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்துகொண்டுள்ளது. மிரட்டிக் கொண்டும் உருட்டிக்கொண்டும் அச்சுறுத்தும் வகையில் ஆட் சியை நடத்திவருகிறார்கள்.
"அனைவரும் விரைவில் வர வுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அடுத்து தமிழகத்தை ஆட்சி செய்யவிருக்கும் கட்சி, தமிழ கத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லவிருக்கும் கட்சி திமுகதான்.
"தேர்தல் எப்போது வந்தாலும் அதில் திமுகதான் நிச்சயம் வெற்றிபெறும். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை," என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!