‘40 தொகுதிகளுக்கும்  அதிமுக விருப்ப மனு’

Image result for CHIEF MINISTER PALANISAMY

சென்னை: எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் தங்களது விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சித் தலைமை அறி வித்துள்ளது. அதிலும், தமிழகத் திலும் புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக் களை அளிக்கலாம் என அறிவிப்பு வெளியானதால், இத்தேர்தலில் அதிமுக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ள தாகக் கருதப்படுகிறது. அதிமுக தலைமையில் பெரிய கூட்டணி அமையும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், திடீர்த் திருப்ப மாக 40 தொகுதிகளுக்கும் அதி முகவில் விருப்ப மனுக்கள் பெறப் படுவதால், கூட்டணி குறித்த அதன் நிலைப்பாடு மாறி விட்டதோ பாஜக குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் ஆயத்தப் பணிகளை செவ்வனே செய்து வருகிறது அதிமுக தலைமை.
பிரசாரம் செய்வதற்கும் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும் என தனித் தனி சிறப்புப் குழுக் களை அமைத்துள்ளது. ஒவ்வொரு தேர்தல் வேலையையும் கண்ணும் கருத்துமாகவும் கட்டம் கட்ட மாகவும் செயல்படுத்தி வெற்றிக் கான வியூகங்களை அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தொகுதிப் பங்கீடு செய்யவும் குழு அமைக்கப்பட்டுள் ளது. மேலும் பிரசாரக் குழு, தேர் தல் அறிக்கை தயாரிக்கும் குழு வையும் அமைத்துள்ளது அதிமுக தலைமை. அடுத்தகட்டமாக விருப் பமனுக்களும் பெறப்படுகின்றன.
விருப்ப மனுக்கள் அளிப்போர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"நாற்பது தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன என்றாலும், கூட்டணி குறித்து அதிமுக தலைமை தொடர்ந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி மீண்டும் தமிழகத் திற்கு வருவதற்குள் கூட்டணி இறுதி செய்யப்படும். அதன் பிறகு தொகுதிப் பங்கீடு குறித்த விவ ரங்களும் உடனுக்குடன் வெளி யாகும்," என்றும் பேசப்படுகிறது.
இம்முறை பாமகவுக்கு 7 தொகுதிகள், தேமுதிகவுக்கு 3, பாஜகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ள போதிலும் பேச்சுவார்த்தை முடி வுக்கு வரவில்லை. பாஜக தரப்பில் 15 தொகுதிகள் கேட்கப்படுவதால் கூட்டணிப்பேச்சு இழுபறியாக உள் ளது எனக் கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும், 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் குவியும் என அக்கட்சித் தலைமை எதிர்பார்ப்ப தாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!