3.5 நிமிடங்களில் 300 வகை உணவுகள் மூன்றரை நிமிடங்களில் 300 

வகையான இயற்கை உணவு களை சமைத்து உலக சாதனை
படைக்கப்பட்டுள்ளது. நெருப்பு, எண்ணெய், பயன்படுத்தாமல், காய்கறிகளை வேக வைக்காமல் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ள தாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தூய மல்லிப் பொங்கல், பலாப்பழப் பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், செவ்வாழைப் பாயாசம், வெற்றிலை ரசம் என 300 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்துள்ளோம். இத்தகைய முயற்சி மேற்கொண் டது உலக அளவில் இதுவே 
முதல் முறை. இயற்கையான உணவுப் பழக்கமே ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளம் என்று இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சமையல் கலைஞர் சிவகுமார் தெரிவித்தார்.
படம்: தமிழக ஊடகம்