போலிசார் தம்மை மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக பேராசிரியை நிர்மலாதேவி குற்றச்சாட்டு

விருதுநகர்: தமது உறவினர்கள், நண்பர்களைச் சந்திக்க சிறைத் துறை தொடர்ந்து அனுமதி தர மறுப்பதாக பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார். 
இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், நிர்மலாதேவியை மிரட்டி போலிசார் வாக்குமூலம் பெற்றிருப்பதாகச் சாடினார். 
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியை யாகப் பணியாற்றி வந்தார் நிர்மலா தேவி. சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் செல்ல நிர்ப்பந்தித்ததாக இவர் மீது புகார் எழுந்தது.  
இதையடுத்து மாணவிகளுடன் அவர் பாலியல் பேரத்தில் ஈடு பட்டதாகவும் கூறப்பட்டது. 
இதையடுத்து நிர்மலாதேவியை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பின ரும் வலியுறுத்தினர். மேலும் சில முக்கிய புள்ளிகள் அவரை இயக் குவதாகவும் கூறப்பட்டது. இத னால் பெரும் பரபரப்பு நிலவியது.
கடந்த ஏப்ரல் மாதம் நிர்மலா தேவி, மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகிய முவரும் கைதாகினர். இதுவரை மூவருக்கும் பிணை வழங்கப்படாத நிலையில் நிர்மலா தேவியின் உடல்நிலை வெகுவாக  பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டியன் தெரி வித்துள்ளார்.
தமக்குப் பல்வேறு இடையூறு களை ஏற்படுத்தி பிணை கிடைக்க விடாமல் சிலர் செயல்படுவதாக நிர்மலாதேவி கூறியுள்ளார்.
“நிர்மலாதேவி மீதான வழக்கை பாலியல் வழக்காக பார்க்கின்றனர். இது வெறும் பாலியல் வழக்கு மட்டுமல்ல. மிகப்பெரிய அரசியல் பின்னணியும் உள்ளது. தமது உறவினர்கள், நண்பர்களைப் பார்க்க அனுமதிக்குமாறு நிர்மலா தேவி எழுதிக் கொடுத்தும் கடந்த 10 மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
“இதில் சிறை விதிகளை மீறியுள்ளனர்,” என்றும் வழக்க றிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

நாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம் 

சிலம்பம் இந்தியாவின் புராதன தற்காப்-புக் கலை என்றும் அதன் தோற்றுவாய் தமிழ்நாடு என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

சிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு