திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் கைவிரிப்பு

மதுரை: திருவாரூர் தொகுதிக் கான இடைத்தேர்தலை எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்துள்ளது. இது தொடர் பாக மத்திய உள்துறை அமைச் சுக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தின் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
திருவாரூரில் ஜனவரி 28ஆம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இது சட்டவிரோதம் எனக் குறிப்பிட்டு மதுரையைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்றக் கிளை யில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என தமது மனுவில் அவர் கோரி யிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. 
அப்போது உள்துறை அமைச்ச கத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத் தின் நகலைத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
“இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என அனைத்துக் கட்சிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யப் பட்டது. 
“இந்நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த இயலாது. உரிய காலம் வந்ததும் இடைத்தேர்தல் நடத்தப் படும்,” என அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள் ளது. தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப் பதாக மனுதாரர் சாடியுள்ளார்.
இதையடுத்து விசாரணை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.