கோடிக்கணக்கில் முறைகேடு: கல்வித்துறை அதிகாரி எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு

சென்னை: கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து கல்வித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கிய தாகக் கூறப்படுகிறது. 
சென்னையில் இயங்கிவரும் மாநிலக் கல்வியியல் மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநராக உள்ளார் அறிவொளி. இம்மையத் தின் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
மாணவர்களுக்காக இம்மையம் நடத்தி வந்த மாத இதழுக்கு அரசு நிதி ஒதுக்கி வருகிறது. மேலும் இம்மையத்தின் மூலம் ‘உலகமெல்லாம் தமிழ்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதுபோன்ற நடவடிக்கைகளை முழுமையாகச் செயல்படுத்தாமல் பொய்க்கணக்கு காண்பித்து முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து எழுந்த சில புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்போது முறைகேடு கள் நடந்திருப்பது உறுதியானது. 
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலிசார் அதிகாரி அறிவொளியின் வீடு, அலுவலகத்தில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அவ ரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநர் என்ற வகையில் அறிவொளியின் அனுமதியோடு முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள லஞ்ச ஒழிப்புப் போலிசார், மேலும் சிலரை இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்துள்ளனர். 
இந்நிலையில் அறிவொளி எந்த நேரத்திலும் கைது செய்யப் பட வாய்ப்புள்ளதாக காவல்துறை  வட்டாரத் தகவல்கள் தெரிவிக் கின்றன. அவருக்கு எதிரான ஆவணங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து போலிசார் அவரைக் கைது செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரி ஊழல் முறைகேடு வழக்கில் சிக்கியிருப் பதும், கோடிக்கணக்கில் முறை கேடு நடந்திருப்பதும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.