பொது இடத்தில் கட்டிப்பிடித்த இரு பதின்ம வயதினருக்கு பிரம்படி

பண்டா அச்சே: இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தில் பொது இடத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த இரு பதின்ம வயதினருக்கு பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது. 
தலைநகர் பண்டா அச்சேயில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில் பல்கலைக்கழக மாணவிக்கும் அவரது காதலருக்கும்         ( இருவருக்கும் வயது 18 ) தலா 17 பிரம்படி தரப்பட்டது.
உள்ளூர் பல சரக்குக் கடை ஒன்றில் நாற்பது வயது பெண்ணுடன் நெருக்கமாக இருந்த 35 வயது நபருக்கும் நேற்று பிரம்படி தரப்பட்டது.